முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை.

Update: 2021-08-02 17:08 GMT
கூடலூர்,

ஆடி கிருத்திகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அங்கு முருகனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் குசுமகிரி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. 

தொடர்ந்து காலை 11 மணிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கூடலூர் அருகே சந்தன மலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

நலம் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னிதானத்தில் சுவாமிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பந்தலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்