ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி சிகரெட் பறிமுதல். 4 வியாபாரிகள் கைது

ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி சிகரெட் பறிமுதல்

Update: 2021-08-02 16:56 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட  ஹான்ஸ், குட்கா விற்பனை செய்ப்படுகிறதா என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தலைமையில் சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாசம் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று வாணியம்பாடியில் உள்ள முகமது அலி பஜார், பூக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். 

அப்போது முகமது அலி பஜார் கோவாராம் (வயது 34), ஷாந்தியால் (23), ஜிதியேந்தர் (26), கோபால் ராம் (33) ஆகியோரின் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கோவாராம் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து வாணியம்பாடி டவுன்  போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அங்கு அவர்களிடம் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம்,  இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்