கம்பம் அருகே ஹெல்மெட் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கம்பம் அருகே விஷம் குடித்து ஹெல்மெட் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-02 16:27 GMT
கம்பம்:
கம்பத்தை அடுத்த கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் நல்லழகு என்ற முகமது அப்ரித் (வயது 37). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். முகமது அப்ரித் கம்பம்மெட்டு மலைப்பாதை அடிவாரத்தில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கு வியாபாரம் சரிவர நடைபெறாததால் வருமானமின்றி தவித்து வந்தார். 
இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த முகமது அப்ரித் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முகமது அப்ரித் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்