காரிமங்கலத்தில் ஜவுளிக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
காரிமங்கலத்தில் ஜவுளிக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காரிமங்கலம்:
காரிமங்கலத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). இவருக்கு நாகமணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் காரிமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனைவியிடம் மது குடிப்பதற்காக அவர் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் மது குடிப்பதற்காக மனைவி மற்றும் மகள்களிடம் ராமலிங்கம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராமலிங்கத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.