தர்மபுரி அருகே வடமாநில தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே வடமாநில தொழிலாளி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-08-02 15:30 GMT
தர்மபுரி:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கிரோசிதந்தி (வயது 46). டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான இவர் தர்மபுரியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவா் எரங்காட்டுக்கொட்டாய் பகுதியில் ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கி திடீரென விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளியின் சாவுக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்