நகையை பறிக்க முயன்ற கொள்ளையர்களுடன் போராடிய பெண் கண்காணிப்பு கேமரா காட்சிகளால் பரபரப்பு

நகையை பறிக்க முயன்ற கொள்ளையர்களுடன் போராடிய பெண் கண்காணிப்பு கேமரா காட்சிகளால் பரபரப்பு.

Update: 2021-08-02 10:45 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லி கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் சரண்யா (வயது 32). நேற்று முன்தினம் இரவு வீ்ட்டின் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சரண்யா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, உடனடியாக சுதாரித்து கொண்டு நகையை பறிக்க விடாமல் கொள்ளையர்களுடன் போராடினார். இதனால் நகையை பறிக்க முடியாத ஆத்திரத்தில் சரண்யாவை கீழே தள்ளிவிட்டு கொள்ளையர்கள் இருவரும் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்த புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்