ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மாயமான புதுப்பெண் மேற்கு வங்காளத்தில் மீட்பு
மாயமான புதுப்பெண் மேற்கு வங்காளத்தில் மீட்பு
ஜோலார்பேட்டை
ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி கிராமம் நடுவூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது23). அதே பகுதியில் சொந்தமாக கார்வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி ஷோபா (20). இவர்களுக்கு கடந்த மே மாதம் 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
திருப்பூரில் ஷோபாவுடன் பணிபுரிந்த மேற்குவங்காளத்தை சேர்ந்த தோழி ஜெயஸ்ரீ ராவ், ஷோபாவை பார்க்க ஆம்பூருக்கு வந்திருந்தார்.
அவரை ரெயில் மூலம் ஊருக்கு அனுப்பிவைக்க காமராஜ் மற்றும் ஷோபா ஆகியோர் ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்துக்கு வந்தபோது ஷோபா திடீரென மாயமானார். இதுகுறித்து காமரா ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷோபாவை தேடிவந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஷோபாவின் தோழியின் ஊரான மேற்கு வங்காளத்திற்கு சென்று அங்கிருந்த ஷோபா மீட்டனர்.
விசாரணை திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் தோழியுடன் சென்றதாக கூறினார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.