மேலும் 60 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சேலம் வந்தன 138 மையங்களில் இன்று முகாம் நடக்கிறது
மேலும் 60 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சேலத்துக்கு கொண்டு வரப்பட்டன. சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது
சேலம்:
சேலத்திற்கு நேற்று 60 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதில் சேலம் மாவட்டத்திற்கு 21 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 138 மையங்களில் பொதுமக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.
அதே போன்று தர்மபுரிக்கு 11 ஆயிரத்து 500, கிருஷ்ணகிரிக்கு 14 ஆயிரம், நாமக்கல்லுக்கு 13 ஆயிரம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.