கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு
பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
பழனி:
திருப்பூர் மாவட்டம் கனியூரை சேர்ந்தவர் அருள்ெசல்வன் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவரும், அவருைடய நண்பரான வேலாயுதம் (52) சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் பழனி சென்றுவிட்டு ஊருக்கு நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
புஷ்பத்தூர் அருகே பழனி-உடுமலை நோக்கி சென்ற கார், அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அருள்செல்வனும், வேலாயுதமும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அருள்செல்வன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.