பரமக்குடி,
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழாம்பல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு நாம் தமிழர் கட்சியின் கீழாம்பல் கிளையின் சார்பில் அங்கு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தட்டச்சு பயிற்சி வழங்க தட்டச்சு எந்திரம், மற்றும் மின்விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் செல்லத்துரை தலைமை தாங்கினார். சசிகலா, பரமக்குடி தொகுதி செயலாளர் ஜஸ்டின் வளனரசு, மாநில பரப்புரையாளர் அலங்கனூர் வினோத் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் நாகராசு, போகலூர் ஒன்றிய மாணவர் பாசறை செயலாளர் விஸ்வா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.