ஆசிரமவாசியிடம் தங்க சங்கிலி பறிப்பு
ஆசிரமவாசியிடம் சங்கிலி பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, ஆக.2-
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை சேர்ந்தவர் கவுல் (வயது 70). இவர் நேற்று இரவு வீட்டு தேவைக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு சைக்கிள் ரிக்ஷாவில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து வந்த வாலிபர், திடீரென்று கவுல் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
இதுபற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நகை பறித்துச் சென்றவரின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை கொண்டு அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.