குடியாத்தம் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

Update: 2021-08-01 18:20 GMT
குடியாத்தம்

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கஞ்சா விற்பதாக வந்த புகார்களின் பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், வெங்கடேசன் மற்றும் போலீசார் குடியாத்தம் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் நேற்று காலை சோதனை நடத்தினர்.

இதில் குடியாத்தம் கஸ்பா சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 39) என்பவரையும், சித்தூர் கேட் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த  தரணம்பேட்டை மதார் சாகிபு தெருவைச் சேர்ந்த சுலைமான் (19) என்பவரையும், மேல் ஆலத்தூர் கிராமத்தில் கஞ்சா விற்ற தினேஷ்குமார் (23), சஞ்சய் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்