பஸ் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரசுரம் வழங்கிய கலெக்டர்
சிவகங்கையில் பஸ் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகங்கை பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி வரவேற்று பேசினார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
2-ம் நாளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைகளை சுத்தமாக கழுவுதல் பற்றிய விழிப்பணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும், 3-ம் நாளில் வர்த்தக பயன்பாட்டு நிறுவனங்கள் அளவிலான கூட்டங்களும் நடத்தப்படும்.4-ம் நாள் சுங்கச்சாவடி பகுதிகளில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வும், 5-ம் நாள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு போட்டிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். 6-ம் நாள் தெருக்கூத்து நாட்டுப்புற கலைகள் மூலம விழிப்புணர்வும்இ 7-ம் நாள் நிகழ்ச்சியாக மாவட்ட அளவிலான கொரோனா தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்ட கிராமங்கள், ஊராட்சிகள் மற்றும் வார்டுகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.
கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை பல்வேறு பாதிப்புகளை கொடுத்தது. தற்போது கொரோனா 3-வது அலையாக வராமல் இருக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். 18 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.
அதன்பிறகு பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தவர்களிடமும், பஸ்சில் ஏறி பயணிகளிடமும், அங்குள்ள கடைக்காரர்களிடமும் கொரோனா நோய் தாக்குதலில் இருந்து தப்பிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, கண்காணிப்பாளர் பாலமுருகன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், நகராட்சி ஆணையாளர் அய்யப்பன், பூச்சியியல் வல்லுனர் ரமேஷ், சுகாதாரஆய்வாளர் முருகேசன், சுகாதார நல கல்வியாளர் சாகுல்அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் வீரையா நன்றி கூறினார்.
சிவகங்கையில் பஸ் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்கள் முழுமையாக தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத கட்டுப்பாட்டை அறிவித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் முதல்நாள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி கொரோனா தடுப்பது குறித்த கையேடுகள் வழங்கப்படுகிறது.
தெருக்கூத்து
கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை பல்வேறு பாதிப்புகளை கொடுத்தது. தற்போது கொரோனா 3-வது அலையாக வராமல் இருக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். 18 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசுரம்