ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
7 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.