சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை. கலெக்டர் உத்தரவு
சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை
தண்டராம்பட்டு
கொரோனா வைரஸ் 3-வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து விடுத்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டம் கூடும் இடங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) ஆடிக்கிருத்திகை விழா என்பதால் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணைக்கு பொதுமக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு சாத்தனூர் அணையை மூட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார் .
எனவே சுற்றுலா பயணிகள் சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சாத்தனூர் அணை உதவி பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.