ஆண்டிப்பட்டி அருகே விஷம் குடித்து மாணவர் தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-08-01 16:41 GMT
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது 2-வது மகன் பழனிக்குமார் (வயது 18). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்கான் ஏற்பாடுகளை செய்து வந்தார். அப்போது அவரது தந்தை ரமேஷ், கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க அறிவுறுத்தினார். 
ஆனால் அந்த கல்லூரியில் படிக்க பழனிக்குமாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பழனிக்குமார் கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டில் தகவல் எதுவும் சொல்லாமல் சொந்த ஊரான ஆண்டிப்பட்டி அருகே ராஜகோபாலன்பட்டிக்கு வந்துள்ளார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் தந்தைக்கு சொந்தமான தோட்டத்தில் பழனிக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்