தேவதானப்பட்டி அருகே கிணற்றில் விழுந்து காட்டெருமை பலி

தேவதானப்பட்டி அருகே கிணற்றில் விழுந்து காட்டெருமை பலியானது.

Update: 2021-08-01 16:38 GMT
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு கிராமத்தில் உள்ள தனியார் வாழை தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு காட்டெருமை ஒன்று புகுந்தது. அப்போது அந்த காட்டெருமை தோட்டத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. இதில் நீரில் மூழ்கிய காட்டெருமை பரிதாபமாக இறந்துபோனது. 
இதற்கிடையே நேற்று காலை தோட்டத்திற்கு வந்த தொழிலாளர்கள், கிணற்றில் காட்டெருமை இறந்து கிடப்பதை பார்த்தனர். பின்னர் இதுகுறித்து பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், கிணற்றில் இறந்து கிடந்த காட்டெருமை உடலை கயிறு கட்டி மீட்டனர். 
இதைத்தொடர்ந்து தேவதானப்பட்டி வன சரகர் டேவிட்ராஜ் முன்னிலையில் கால்நடை மருத்துவக்குழுவினரால் காட்டெருமை உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அப் பகுதியில் புதைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்