கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்

திருச்செந்தூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.;

Update: 2021-08-01 16:34 GMT
திருச்செந்தூர்:
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராமல் தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரு வார காலத்திற்கு தினசரி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட், பெட்ரோல் பல்க், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திருச்செந்தூர் மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம் தலைமையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்