சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது;

Update: 2021-08-01 16:30 GMT
திருப்பூர்
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கட்டபொம்மன்நகர் பகுதியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கும்பல் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 
இதனைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நடராஜன் (வயது 33), சங்கர் (23), பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (36), கல்கி (36), பெரியாயிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (30) ஆகிய 5 பேரை கைது செய்து, சேவல்களையும பறிமுதல் செய்தனர்.  

மேலும் செய்திகள்