குலசேகரன்பட்டினம் கோவிலில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
குலசேகரன்பட்டினம் கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது.;
குலசேகரன்பட்டினம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் முன்பு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். தென் மண்டல செயலாளர் தனலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலன், திருச்செந்தூர் நிர்வாகிகள் தங்கராஜா, பால்ராஜ், இசக்கிமுத்து, உடன்குடி ஒன்றிய தலைவர் குணசேகரன், பாலசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலர் ரவிகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
பின்னர் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.