டிராக்டர் டயரை கழற்றிய போது டியூப் வெடித்ததில் படுகாயம் அடைந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு

டிராக்டர் டயரை கழற்றிய போது டியூப் வெடித்ததில் படுகாயம் அடைந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-08-01 14:04 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி கிராமம் சிறை மீட்டான் காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் சுரேஷ் (வயது40). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேதாரண்யம் தெற்கு வீதியில் உள்ள ஒர்க்ஷாப்பில் டிராக்டரை பழுது பார்க்க கொண்டு வந்தார். சுரேஷ் டிராக்டர் டயரை கழற்றடி பார்த்து கொண்டிருந்தார். 

அப்போது டிராக்டர் டயர் டியூப் வெடித்து அதில் இருந்த டிஸ்க் என்ற இரும்பு கருவி அவர் முகத்தில் பலமாக அடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சுரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர். உயிரிழந்த சுரேசுக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்