குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீதேவி குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகள், அங்கன்வாடி மையம், நுண்ணுயிர் உரம் தயாரித்தல், திறந்தவெளி கிணறு அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-08-01 05:21 GMT
ஆய்வின் போது செயற் பொறியாளர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், சீனிவாசன், உதவி பொறியாளர்கள் சுப்புராஜ், வசுமதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அலுவலக பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வை தொடர்ந்து ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்