தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கைது

நெல்லை அருகே கட்டிட காண்டிராக்டர் கொலை வழக்கில் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.;

Update: 2021-07-31 19:55 GMT
நெல்லை:
நெல்லை அருகே கட்டிட காண்டிராக்டர் கொலை வழக்கில் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கட்டிட காண்டிராக்டர் கொலை

நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்து கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் கண்ணன் (வயது 33). கட்டிட காண்டிராக்டரான இவர் கடந்த மாதம் 12-ந் தேதி பண்டாரகுளம் விலக்கு பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகைக்குளத்தை சேர்ந்த நல்லதுரை, அம்மு வெங்கடேஷ், சங்கிலி பூதத்தான், குருசச்சின், முத்துகிருஷ்ணன், சதீஷ்ராஜா, கட்டுடையார்குடியிருப்பைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற மொங்கான், சிவந்திபட்டியை சேர்ந்த அதிசயபாண்டி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

கண்ணபிரான் கைது

மேலும் இந்த வழக்கில் தச்சநல்லூரை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் மற்றும் வாகைகுளத்தை சேர்ந்த பன்னீர்பாஸ் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கண்ணபிரான் மற்றும் பன்னீர்பாஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி 2 பேரும் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து கட்டிட காண்டிராக்டர் கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்