தடுப்பூசி போட வந்த பொதுமக்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு

செங்கோட்டை அருகே தடுப்பூசி போட வந்த மக்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-07-31 19:40 GMT
செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது. வடகரை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் முகம்மது இப்ராகீம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். டாக்டா் மதன்கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம், பண்பொழி நகர பஞ்சாயத்து செயல் அலுவலா் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனா். குமார் வரவேற்று பேசினார்.

முகாமில் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கூட வாசலில் வாழைமரம் கட்டி வண்ணக்கோலங்கள் வரைந்து நாதஸ்வரம், தவில் மேளதாளங்கள் முழங்க தடுப்பூசி போட வந்த பொதுமக்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் செவிலியர் சேது லட்சுமி, பிரேமலதா, பண்பொழி வர்த்தக சங்க தலைவா் முகம்மது இஸ்மாயில். சமூக ஆர்வலா் ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

மேலும் செய்திகள்