தோகைமலையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்

தோகைமலையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றனர்.;

Update: 2021-07-31 18:25 GMT
தோகைமலை
தோகைமலையில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் திருப்பதிக்கு செல்லவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் தோகைமலையை சேர்ந்த பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்து மாலை அணிந்து கடந்த 11 நாட்கள் விரதம் இருந்தனர். இதையடுத்து நேற்று தோகைமலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் தோகைமலை பாதயாத்திரை குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் தோகைமலை வரதராஜ பெருமாள் ேகாவிலில் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். பாதாயாத்திரையாக சென்ற பக்தர்கள் அனைவருக்கும் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்