வீடுபுகுந்து திருட முயற்சி
வீடுபுகுந்து திருடமுயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
பட்டணம்காத்தான் மீனாட்சிநகரை சேர்ந்தவர் சாத்தையா மகன் தர்மலிங்கம் (வயது56). இவர் தனது மனைவி நூறு நாள் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டை பூட்டிவிட்டு பாரதிநகர் பகுதிக்கு சென்றுவிட்டார். அப்போது மர்ம நபர் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் திருட முயன்றுள்ளார். உள்ளே ஒன்றும் இல்லாததால் சென்று விட்டான். வெளியில் சென்ற தர்மலிங்கம் திரும்பி வந்து பார்த்தபோது திருட்டு முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.