வாலிபரை கொலை செய்த 6 பேர் கைது
வாலிபரை கொலை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமுதி,
கமுதி அருகே கீழகாக்காகுளத்தைச் சேர்ந்த முத்துராமு மகன் கருப்பையா (வயது37). இவர் மோட்டார் சைக்கிளில் கீழநரியன் கிராமத்திற்கு சென்றுவிட்டு வந்துகொண்டு இருந்தார். அப்போது, கீழநரியன் பஸ் நிறுத்தம் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் கருப்பையாவை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸ் நிலையத்தில் கருப்பையாவின் மனைவி வளர்மதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை யாளிகளை தேடிவந்தனர். இதுதொடர்பாக போலீசார் கீழநரியன் கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் கார்த்திகைசாமி (29), செல்வராஜ் மகன் ரமேஷ்குமார் (30) மற்றும் 4 சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைத் தனர்.