குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து; 3 பேர் காயம்
குருபரப்பள்ளியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
குருபரப்பள்ளி:
ஓசூரில் இருந்து காய்கறி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு வேன் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த வேன் மேலுமலை தாண்டி தனியார் கல்லூரி முன்பாக வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் பின்னால் வந்த வாகனங்கள் மெதுவாக வந்தன. அப்போது ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, முன்னால் சென்ற 2 லாரிகள், ஒரு மோட்டார்சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் ஒரு காய்கறி வேன், 3 லாரிகள், ஒரு மோட்டார்சைக்கிள் என மொத்தம் 5 வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.