மீன் வளர்ப்பை விரிவுபடுத்த மானியம்; கலெக்டர் தகவல்

மீன் வளர்ப்பை விரிவுபடுத்த மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.

Update: 2021-07-31 17:57 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பை விரிவுபடுத்திட மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மானியம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பினை விரிவுப்படுத்திட மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நீர் இருப்பு 0.25 எக்டேர் முதல் ஒரு எக்டேர் வரை உள்ள பண்ணைக்குட்டை மீன்வளர்ப்போர் இத்திட்டத்தின்கீழ் சேர்ந்து பயனடையலாம்.
பண்ணைக்குட்டை அமைக்க 50 சதவீத மானியமும் (ரூ.3 லட்சத்து 50 ஆயிரம்), செயல்பாட்டு செலவினத்திற்கு உள்ளீட்டு மானியமாக 40 சதவிகிதம் (ரூ.60 ஆயிரம்) வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு...

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், 166, வடக்கு கடற்கரை சாலை, மீன்துறை வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியிலும், 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலும் வார வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்