பொள்ளாச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

பொள்ளாச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-31 17:21 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி உத்தரவின்பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமலை, மனோகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பொள்ளாச்சி-கோட்டூர் மெயின் ரோடு மேம்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், போலீசாரை பார்த்தும் திரும்பி செல்ல முயன்றார். இதனைக்கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் பூவூரை சேர்ந்த ஆனந்த் (வயது 39) என்பதும், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் திருடி மறைத்து வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்