விவாகரத்து கேட்டு கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஆசிரியைக்கு மிரட்டல்

விவாகரத்து கேட்டு கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஆசிரியைக்கு மிரட்டல்

Update: 2021-07-31 17:00 GMT
விவாகரத்து கேட்டு கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஆசிரியைக்கு மிரட்டல்
கோவை

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது39). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-


கோவை கணபதியில் என்னுடைய கணவர் பிரதீப். பிளெக்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். குடும்ப தகராறு காரணமாக நான் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்தநிலையில் வேறு ஒரு பெண்ணுடன் என்னுடைய கணவருக்கு கள்ளக்காதல் உள்ளது. அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்வதற்காக கணவரும், கள்ளக்காதலியும், அந்த பெண்ணின் தாயாரும் சேர்ந்து கொண்டு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடுமாறு எனது ஊருக்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார், கணவர் பிரதீப் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்