பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபர்

ராணிப்பேட்டையில் பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை முகநூலில் வாலிபர் பதிவிட்டார். அதனை தட்டிக் கேட்ட பெண்ணின் தந்தையை தாக்கியதால் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-07-31 16:50 GMT
சிப்காட் 

ராணிப்பேட்டையில் பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை முகநூலில் வாலிபர் பதிவிட்டார். அதனை தட்டிக் கேட்ட பெண்ணின் தந்தையை தாக்கியதால் கைது செய்யப்பட்டார். 

ராணிப்பேட்டை சீனிவாசன்பேட்டை பகுதியை சேர்்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 29). இவர் பள்ளியில் தன்னுடன் படித்த பெண்ணுடன் நட்பு ரீதியாக பழகியுள்ளார். 

அப்போது இருவரும் ஒன்றாக செல்போனில் படம் எடுத்துக் கொண்டுள்ளனர். பின்னர் ரஞ்சித்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால், அவரிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்தினார். 

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார் அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை முக நூலில் (பேஸ் புக்) பதிவிட்டுள்ளார்.

இதனை பெண்ணின் தந்தை தட்டிக்கேட்கவே அவரை ரஞ்சித் குமார் அவதூறாக திட்டி ஒழித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். 

வேதனை அடைந்த அந்த பெண் ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்