ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை நடந்தது.

Update: 2021-07-31 16:44 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை நடந்தது. 

தமிழக அரசு ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை வலி இல்லாமல் ரத்தம் சிந்தாமல் நவீன முறையில் செய்ய வருவோர்க்கு ஊக்கத் தொகையாக ரூ.1,100 மற்றும் அவரை அடையாளம் கண்டு அழைத்து வருவதற்கு ரூ.300 வழங்க உத்தரவிட்டது. 

அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை உதவி இயக்குனர்கள் செந்தில், மணிமேகலை (குடும்ப நலம்) உத்தரவின்பேரில் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இதையடுத்து கருத்தடை செய்தவருக்கு ஊக்குவித்து பணம் மற்றும் பாராட்டு வழங்கும் நிகழ்ச்சி குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் ஜி.தீபா தலைமை தாங்கினார். கருத்தடை ஆபரேஷன் செய்த நபரை பாராட்டி சான்றிதழை வாலாஜா அரசு மருத்துவமனை கருத்தடை அறுவை சிகிச்சை நிபுணர்  கே.கீர்த்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் செந்தில், வட்டார சுகாதார புள்ளியல் நிபுணர் செல்லதுரை, கிராம சுகாதார செவிலியர் ம. முருகம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்