குண்டடம் அருகே முன் விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

குண்டடம் அருகே முன் விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-31 15:59 GMT
குண்டடம்
குண்டடம் அருகே முன் விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 43). விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கருணாகரன் (63) என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நந்தவனம்பாளையம் அரசு பள்ளி முன்பு சேகர் நின்றிருந்தார். 
அப்போது அங்கு வந்த கருணாகரன் சேகரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து கருணாகரன் அங்கிருந்து சென்றார்.
அரிவாள் வெட்டு
சிறிது நேரத்திற்கு பிறகு  கருணாகரன்  அரிவாளுடன் திரும்பி வந்து அங்கு நின்றிருந்த சேகரை வெட்டி விட்டு தலைமறைவானார். 
இதில் சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்தோர் சேகரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்ததனர். இதுபற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாகரனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்