கொரோனா பாதிப்பில் இருந்து தவிர்க்க பெற்றோர் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லக்கூடாது என்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா கூறினார்.

கொரோனா பாதிப்பில் இருந்து தவிர்க்க பெற்றோர் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லக்கூடாது என்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா கூறினார்.

Update: 2021-07-31 15:48 GMT
திருப்பூர்:
கொரோனா பாதிப்பில் இருந்து தவிர்க்க பெற்றோர் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லக்கூடாது என்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா கூறினார்.
புகையிலை பொருட்கள்
திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை இணைந்து வணிக நிறுவனங்கள், திருமண மண்டப உரிமையாளர்களுக்காக கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று காலை திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமை தாங்கி பேசியதாவது:-
கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம்.  கொரோனா  அடுத்த அலை யாரை தாக்கும் என்பது தெரியவில்லை. பெற்றோர்களுக்கு இதை புரிய வைப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கூட ஞாயிற்றுக்கிழமையன்று தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மக்கள் அதிகமாக கூடுகிறார்கள். இதற்காகவே காவலர்கள் அங்கு நியமிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
குழந்தைகள் 
வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், ஜவுளிக்கடைக்காரர்கள் இதை கருத்தில் கொண்டு கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  கொரோனா பாதிப்பு அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.  5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்து வரக்கூடாது. 
மாநகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அங்கிருந்து காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்க இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அலட்சியம் காட்டாதீர்
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி பேசும்போது, ‘கொரோனா குறித்து அலட்சியம் காட்டாமல் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது ஆகியவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும்’ என்றார்.
இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்கள் ஒழிப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை, மாநகர் நல அதிகாரி பிரதீப்வாசுதேவன் கிருஷ்ணகுமார், போலீஸ் துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி, உதவி கமிஷனர்கள் கண்ணன், தங்கவேல்ராஜன்,  திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், பேக்கரிகள், தியேட்டர்கள், சிறு, குறு வணிக நிறுவன உரிமையாளர்கள், கடைக்காரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்