வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2021-07-31 12:13 GMT
திருவண்ணாமலை

வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உட்கோட்டம் வடவணக்கம்பாடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடம்பை கிராமத்தை சேர்ந்தவர் சாம்பமூர்த்தி (வயது 43). 

இவரது வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட செய்யாறு தாலுகா இருங்கல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்ற செந்தமிழ்செல்வன் (29), சென்னை தரமணி கே.பி.கே. நகர் 3-வது தெருவை சேர்ந்த மகாகணபதி (26) ஆகிய இருவரையும் சாம்பமூர்த்தி, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து வடவணக்கம்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
 
இதுகுறித்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர்கள் இருவரும் வந்தவாசி தெற்கு, வடக்கு மற்றும் தேசூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 21 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. 

இவர்கள் இருவரும் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் போில் செந்தமிழ்செல்வன் மற்றும் மகாகணபதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 பின்னர் அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்