வாலிபர் மீது தாக்குதல்; தாய்-மகன்கள் கைது
வாலிபரை தாக்கியதாக தாய்-மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் குமார் (வயது 35). விவசாயி. இவரை, அதே ஊரைச் சேர்ந்த வீரமணியின் மகன் மணிகண்டன் (22), கார்த்திக் (20), வீரமணியின் மனைவி அமுதா (45) ஆகியோர் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து தா.பழூர் போலீசில் குமார் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கார்த்திக், அமுதா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.