கிரிக்கெட் விளையாட்டில் மோதல்; 14 பேர் மீது வழக்கு

கிரிக்கெட் விளையாட்டில் மோதல்; 14 பேர் மீது வழக்கு

Update: 2021-07-30 20:39 GMT
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அடுத்துள்ள வஞ்சிநகரம் அருகே உள்ள ராயர்பட்டியில் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அங்குள்ள மூர்த்தி குட்டுமலை அருகே கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. கிரிக்கெட் விளையாடும்போது இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டனர். ,இதுகுறித்த புகாரின்பேரில் பாரதி கார்த்திக், ராஜா, சூர்யா, செல்வம் உள்பட 14 பேர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்