வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
திருப்பரங்குன்றம்
மதுரை பசுமலையை அடுத்த புது அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் திருமுருகன். இவரது மனைவி ராஜகுமாரி(வயது 50). இவரகள் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த நிலையில் வீடு திரும்பிய ராஜகுமாரி, தனது வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.