கர்நாடகத்தில் புதிதாக 1,890 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,890 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-07-30 20:26 GMT
பெங்களூரு:

  கர்நாடத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியதாவது:-

பரிசோதனைகள்

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 197 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 3 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 34 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 525 ஆக உயர்ந்துள்ளது.

  மருத்துவ சிகிச்சையில் 23 ஆயிரத்து 478 பேர் உள்ளனர். ஒரே நாளில் 1,631 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 43 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் பெங்களூரு நகரில் 426 பேர், பெலகாவியில் 103 பேர், சிக்கமகளூருவில் 88 பேர், தட்சிண கன்னடாவில் 345 போ், ஹாசனில் 135 பேர், குடகில் 77 பேர், மைசூருவில் 142 பேர், சிவமொக்காவில் 88 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் 9 பேர்

  கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பெங்களூரு நகரில் 9 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், பெங்களூரு புறநகர், சிக்கமகளூரு, கோலார், மைசூரு. உத்தரகன்னடாவில் தலா 2 பேர் என மொத்தம் 34 பேர் உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்