கோவிலுக்குள் புகுந்த பாம்பு
அருப்புக்கோட்டையில் கோவிலுக்குள் புகுந்த பாம்பு பிடிப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராகவேந்திரா கோவில் கட்டிடத்தில் கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து கோவிலுக்குள் பதுங்கி இருந்த பாம்பினை பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.