குமரியில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு
குமரியில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தைைய அதிகாரிகள் மீட்டனர்.
கருங்கல்,
குமரியில் ரூ.2 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தைைய அதிகாரிகள் மீட்டனர்.
திருமணத்துக்கு முன்பு கர்ப்பம்
குமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், ஆதிச்சன்புதூர் காலனியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது30). இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதனால், அந்த சிறுமி கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்பு அந்த சிறுமி தனது குழந்தையுடன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
குழந்தை விற்பனை
இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த குழந்தையை கருங்கல் அருகே பாலப்பள்ளம், ெநட்டாவிளைைய சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். குழந்தையை வாங்கிய 3-வது மாதத்தில் பால்ராஜின் மனைவி அருள் சகாயமேரி இறந்தார். இதையடுத்து அந்த குழந்தையை அருள்சகாய மேரியின் தங்கை கோணத்தை சேர்ந்த ஜான்சி பராமரித்து வந்தார்.
இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த வசந்தகுமார் தனது குழந்தைைய மீட்குமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் மனு கொடுத்தார்.
மீட்பு
அந்த மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து கோணம் பகுதிக்கு சென்று ஜான்சியுடன் தங்கியிருந்த குழந்தையை மீட்டு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர், குழந்தையின் தாயையும் அவரது உறவினர்களையும் வரவழைத்து அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.