மின்வாரிய அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

மின்வாரிய அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2021-07-30 19:37 GMT
சேரன்மாதேவி:

பத்தமடை மணிமுத்தார்குளம் முப்பிடாதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை கோவிலுக்கு வெளியில் மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து முன்னணியினர் நேற்று கோபாலசமுத்திரம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், நகர செயலாளர் சுப்பிரமணியன், கிளை தலைவர் மாயாண்டி, பா.ஜ.க. ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்