குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை
ஆலங்குளம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் நியூட்டன். இவரது மனைவி சுதா (வயது 30). இருவருக்கும் செர்லின் லிடியா (1½) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுதா மனமுடைந்து விஷம் குடித்தார். மேலும் தனது குழந்தைக்கும் விஷம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுதா பரிதாபமாக உயிழந்தார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நியூட்டனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.