பனைக்குளம்,
திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது41). ஆட்டோ டிரைவரான இவர், திருப்புல்லாணிக்கு ஆட்டோவில் சென்றபோது பிரப்பன்வலசையை சேர்ந்த விஸ்வநாதன் (19) என்பவர் ஆட்டோவை வழி மறித்து கத்தியைகாட்டி ரூ.550-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதனை கைது செய்தனர்.