திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயி சான்று கேட்டு 585 பேர் மனு அளித்தனர்

சிறு, குறு விவசாயி சான்று கேட்டு 585 பேர் மனு அளித்தனர்

Update: 2021-07-30 18:34 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ஏக்கர் புன்செய் நிலம், 2½ ஏக்கர் நன்செய் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் சிறு, குறு விவசாயி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடத்த மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்திலும் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. திருப்பத்தூர் தாலுகாவில் 251 பேர், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 119 பேர்,  வாணியம்பாடி தாலுகாவில் 131 பேர், ஆம்பூர் தாலுகாவில் 84 பேர் என மொத்தம் 585 பேர் சிறு குறு விவசாயி சான்று கேட்டு மனு அளித்தனர்.
 
15 வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்கள் தணிகாசலம், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் மனுக்களை பெற்றுக் கொண்டனர். திருப்பத்தூர், ஜவ்வாதுமலை புதூர்நாடு, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்