ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
விபத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன் (வயது 68). ஓய்வுபெற்ற சப்-இன்ஸ் பெக்டர். இவர் நடைபயிற்சி சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளிலும் அந்த வழியாக வந்த ஜீப்பும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தூர்பாண்டியன் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் தபசுமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.