திருவாரூர் மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2021-07-30 18:05 GMT
மன்னார்குடி;
ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
ராஜகோபாலசாமி கோவில் 
ஆடி வெள்ளி கிழமையையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் செங்கமலத்தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது செங்கமலத் தாயாருக்கு தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் புகழ் பெற்ற செங்கமலம் யானை செங்கமலத்தாயாருக்கு வெண்சாமாரம் வீசி வழிபாடு நடைபெற்றது. 
குடவாசல் அருகே உள்ள சித்தாடி காத்தாயி அம்மன் கோவிலில் ஆடி மாதம் 2-வது வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம், ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்து புஷ்ப அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.
குடவாசல் கண் தந்த மாரியம்மன் கோவில், நாலாம் கட்டளை வடபத்திர காளியம்மன் கோவில், வல்லம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சீதக்கமங்கலம் மகா காளியம்மன் கோவில், உக்கடை கற்பக மாரியம்மன் கோவில் உள்பட இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு நடைபெற்றது.  
வலங்கைமான்
வலங்கைமான் பகுதிகளில் நேற்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 
 வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் கருவறை அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.  கீழத்தருவில் உள்ள பொன்னியம்மன் கோவில், சின்னகரம் திரவுபதி அம்மன், வலங்கைமான் அருணாச்சலேஸ்வரர், கைலாசநாதர், காசி விசுவநாதர், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சந்திரசேகரபுரம் காமாட்சி அம்மன், ஆலங்குடி மாரியம்மன், ஆவூர் மாரியம்மன் உள்ளட்ட கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  
திருமக்கோட்டை 
திருமக்கோட்டையில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி  வெள்ளியை முன்னிட்டு காலை அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை மகா மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. 
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்