பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள்
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கியது.
திருவரங்குளம், ஜூலை.31-
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கியது.
அகழாய்வு பணி
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே வேப்பங்குடி ஊராட்சியை சேர்ந்தது பொற்பனைக்கோட்டை. இங்கு முன்னோர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக கூறி, இங்கு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இப்பகுதியில் அகழாய்வு பணியை மேற்கொள்ள அனுமதி அளித்தது.
அதன்படி இப்பகுதியில் நேற்று அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதா ராமு, தொல்லியல் ஆய்வுக்கழக இயக்குனர் பேராசிரியர் இனியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரியவகை பொருட்கள்
இங்கு தமிழர்களின் அடையாளங்களாக கருப்பு, சிவப்பு வர்ணம் பூசப்பட்ட பானை ஓடுகள், வளையல்களின் உடைந்த பாகங்கள், மணிகள், தட்டு, கிண்ணம், கலயங்கள் உடைந்த பாகங்கள், சிறிய இரும்பு ஆயுதம், உலோகக் கழிவுகள் போன்றவை மேலோட்டமாக ஆய்வு செய்யும் போது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜி.பி.ஆர்.எஸ். மின்காந்த கருவி கொண்டு அகழ்வாராய்ச்சி பணிக்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் கோட்டைப் பகுதி இருந்ததாகவும், 16 அடுக்கு செங்கற்களால் கட்டப்பட்ட பகுதி இருப்பதாகவும், தென் தமிழகத்திலேயே எங்கும் கிடைக்காத அரிய வகை பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தெரிவித்துள்ளார்.