உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழாவின் 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழாவின் 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-07-30 15:27 GMT
உடுமலை, ஜூலை.31-
உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழாவின் 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆடிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடிப்பெருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
இதில்ஆடிமாத 2-வதுவெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலை மாரியம்மனுக்கு திருமஞ்சனம் மற்றும் உச்சிகாலசிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் சிலர் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற, வீடுகளில் இருந்து ராகி கூள், பொங்கல் ஆகியவற்றை கொண்டு வந்து மற்ற பக்தர்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஶ்ரீதர், செயல் அலுவலர் வி.பி.சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி ரத்தினாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ரத்தினாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்